சின்னதாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக் கட்டடப் பணிக்கு நன்கொடை 2023

சின்னதாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கரூர் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. PR இளங்கோ அவர்களது முன்னெடுப்பில் கரூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பலர் வழங்கிய சுமார் 30 இலட்ச ரூபாய் நன்கொடையில், புதிய வகுப்பறைகள் கட்டித் திறந்து வைக்கப்பட்டன. அந்தப் பணிக்கு, பாவலர் இறையரசனார் நினைவாக, அப்பள்ளியின் முன்னாள் மாணவரான அவரது மகன் திரு. இறை. மதியழகன் ரூ 50,000 வழங்கினார்.

Continue Reading

வேடிச்சிபாளையம் நூலகத்துக்கு நன்கொடை – 2023

27-08-2023 அன்று காலை 10 மணிக்கு சோமூர் அருகே வேடிச்சிபாளையம் புதிதாக நூலக திறக்க ஸ்காட்லாந்தில் பேராசிரியராகப் பணிபுரியும் நண்பர் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தத் துவக்க விழாவில், பாவலர் இறையரசனார் படத்தை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு செல்வி. ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்தார். அவரே பின்னர் நூலகத்தையும் திறந்து வைத்து வாழ்த்திச் சிறப்புரை வழங்கினார். பாவலர் இறையரசனார் நினைவாக, சிங்கப்பூரில் வசிக்கும் அன்னாரது மகன் கவிஞர் இறை. மதியழகன் நூலகத்துக்கு ஒரு லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கி உரையாற்றினார்.   உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் அயலகவாழ் ஆராய்ச்சியாளர்களின் ஒருங்கிணைப்பாளரான முனைவர் பவித்ரா ராஜன் அவர்களும், உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் முனைவர் பாரதி நடராஜன் அவர்களும், ANEH அறிவியல் அறக்கட்டளையின் இயக்குநர் முனைவர் குமார் பழனிசாமி அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த நூலகத்தை உருவாக்கப் பெருமுயற்சி எடுத்த ஸ்காட்லாந்தில் பணிபுரியும் பேராசிரியர் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து ஆற்றிய நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

Continue Reading

இறையரசனார் ஆவணப் படக் காணொளி வெளியீடு – 30 ஆகஸ்டு 2023

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கரங்களால் “பாவேந்தர் விருது” பெற்றவரும் கரூர் மாவட்ட திமுக இலக்கிய அணியின் முன்னாள் செயலாளருமான மறைந்த பாவலர் இறையரசனாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை (27 ஆகஸ்டு) முன்னிட்டு மாண்புமிகு முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்வாழ்த்துகளுடன், 30 ஆகஸ்டு 2023 புதன்கிழமை, சென்னையில் மாண்புமிகு செய்தி & தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள், பாவலர் இறையரசன் அவர்களின் ஆவணப் படத்தை வெளியிட்டுச் சிறப்புச் சேர்த்தார்கள். சிங்கப்பூர்வாழ் தமிழரான, பாவலர் இறையரசனாரின் மகன் இறை. மதியழகன் ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கிறார். அவரும் அவரது உறவினர்களும் வெளியீட்டின்போது உடனிருந்தனர். வெளியிட்டுக்கு முன்னர், மாண்புமிகு அமைச்சர் அவர்களுடனும், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக அயலகவாழ் தமிழர்கள் அணித் தலைவருமான மருத்துவர் கலாநிதி வீராசாமி அவர்களுடனும் சென்று, மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை அறிவியாலடயாத்தில் சந்தித்து வாழ்த்தைப் பெற்றனர். ஆவணப் படக்காணொளி இணைப்பு :

Continue Reading

சிங்கப்பூரில் படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்வு – 2022

பாவலர் இறையரசனாரின் திருவுருவப் படத்தை , சிங்கப்பூரின் மேனாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் திறந்து வைத்தார். [ கீழ்க்கண்ட செய்தி 15-அக்டோபர்-2022 அன்று தமிழ் முரசு நாளிதழில் வெளியானது. நன்றி: தமிழ்முரசு ] கவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் முன்னாள் தலைவர் கவிஞர் இறை.மதியழகனின் தந்தையாரும் குறளும் பொருளும், நாலும் பொருளும், சிலம்பும் பொருளும்-ஆகியன உள்ளிட்ட 14 நூல்களை இயற்றியவரும் பாட்டுரைப் பாவலர் என அழைக்கப்படுபவருமான இறையரசன் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி தமிழகத்தில் காலமானார். அவரது நினைவைப் போற்றும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 9) சிங்கப்பூரில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனந்த பவன் உணவக அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கவிமாலை அமைப்பும், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்தன. கவிமாலைக் காப்பாளர் புதுமைத்தேனீ அன்பழகன், முனைவர் இரத்தின வேங்கடேசன், பேராசிரியர் சுப.திண்ணப்பன் போன்றோர் இறையரசனின் பெருமைகளைப் போற்றினர். இறையரசனின் திருவுருவப் படத்தை முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் திறந்து வைத்து உரையாற்றினார். கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, நா.ஆண்டியப்பன், மு.ஹரிகிருஷ்ணன், அருமைச் சந்திரன், தனபால் குமார் போன்றோரும் இறையரசனார் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி புகழுரை வழங்கினர். இறுதியாக நன்றியுரை நிகழ்த்திய இறை.மதியழகன், தமது தந்தைக்கும் சிங்கப்பூர் கவிஞர்களுக்கும் இடையிலான தொடர்புகளை நினைவுகூர்ந்தார். தமது தந்தையின் தமிழ் வாழ்த்துக் கவிதை பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.

Continue Reading

பாவலர் இறையரசனார் நூல்கள் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒப்படைப்பு – 2022

தந்தையார் பாவலர் இறையரசனார் மறைவின் பின்னர் சிங்கை திரும்பும் முன், அவர்தம் நூல்களைச் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துத்தில் ஆவணக் காப்புத் திட்டத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். 19 செப்டம்பர் 2022 பிற்பகல் அந்த நூலகத்தின் இயக்குநர் திரு.சுந்தர் கணேஷ் அவர்களைச் சந்தித்து நூல்களை ஒப்படைப்பதற்காக நேரம் கேட்டேன். அழைத்தபோது விமானத்தில் இருந்த அவர், சிறிது நேரத்தில் அழைத்துச் சந்திக்க ஒப்புக் கொண்டதில் மன நிறைவு. நானும் இரட்டையரக என்னுடன் பிறந்த சகோதரி மணிமேகலையும், என் தந்தையார் எலவனூரில் இருந்த காலந்த்தில் பால்ய நண்பராகப் பழகி, சென்னையில் வசித்த அமரர் PSR அவர்களின் மகனும், என் நண்பருமான PSR பாபுவும் அங்குச் சென்றிருந்தோம். மிக அரிய நல்ல வாய்ப்பாக, அந்த ஆவணக் காப்புத் திட்டத்தை உருவாக்கி, ஒரு FETNA இணைய நிகழ்விலும், THE RISE LONDON மாநாட்டிலும் அறிவித்தவரான, தமிழ் வரலாற்று ஆய்வாளர், ஒரிசா மாநில முதல்வரின் மதியுரைஞர், மதிப்புக்குரிய ஆர். பாலகிருஷ்ணன் IAS(ஓய்வு) ஐயா அவர்களும் அங்கே இருந்தார்கள். என்னுடன் தொடர்பில் இருப்பவர் என்பதனால்,. தந்தையின் மறைவுச் செய்தியை அறிந்திருந்தார். தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்கள். அருட்தந்தை ஜகத் கஸ்பர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இலண்டன் எழுமின் மாநாட்டில் திரு பாலகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து, அவரது மிகவும் புகழ்பெற்ற Journey of Civilisation நூலைப் பெற்றிருந்தேன். (இந்த நூல் தமிழக முதல்வர் அவர்கள் பல விருந்தினர்களுக்கும் தமிழக அடையாளமாகப் பரிசளிக்கும் தகுதி வாய்ந்தது). அந்த நூலகத்தில், ஏற்கெனவே தந்தையாரின் நான்கு நூல்கள் இருந்ததை திரு. சுந்தர் கணேஷ் அவர்கள், தேடி எடுத்து வைத்திருந்தார்கள். அதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவற்றில் பெரும்பாலான நூல்களுக்கு எங்களிடமே நகல் இல்லாத நிலை. அந்த நூல்கள் வழி அப்பாவைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். 😢 ஆர். பாலகிருஷ்ணன் ஐயா. “உங்கள் தந்தையார் தமிழுக்காக இலக்கியத்துறையில் கடின உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். இப்போதுதான் புரிகிறது உங்களது தமிழார்வம் எங்கிருந்து வந்தது என்று” எனக் கூறினார்கள். சிங்கப்பூர் திரும்பும் அவசரத்தில் வேறு சில முக்கியமான பணிகளும் இருந்ததால், நேரக் குறைவால் அந்த நூலகத்தைப் பார்க்கும் ஆவலை ஒத்தி வைத்து, அவர்களோடு அதிக நேரம் உரையாட இயலாத சூழலுக்கு வருத்தம் தெரிவித்து, திரு சுந்தர் கணேஷ் அவர்களுக்கும், பாலகிருஷ்ணன் IAS அவர்களுக்கும் நன்றி கூறி விடைபெற்றோம். தந்தையாரின் நூல்களை ஆவணக் காப்பகத்தில் ஒப்படைத்த சிறு மன நிம்மதியோடு 20-செப்டம்பர்-2022 காலை சிங்கை வந்து சேர்ந்தேன். ⦁ இறை.மதியழகன்

Continue Reading