இறையரசனார் ஆவணப் படக் காணொளி வெளியீடு – 30 ஆகஸ்டு 2023

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கரங்களால் “பாவேந்தர் விருது” பெற்றவரும் கரூர் மாவட்ட திமுக இலக்கிய அணியின் முன்னாள் செயலாளருமான மறைந்த பாவலர் இறையரசனாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை (27 ஆகஸ்டு) முன்னிட்டு மாண்புமிகு முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்வாழ்த்துகளுடன், 30 ஆகஸ்டு 2023 புதன்கிழமை, சென்னையில் மாண்புமிகு செய்தி & தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள், பாவலர் இறையரசன் அவர்களின் ஆவணப் படத்தை வெளியிட்டுச் சிறப்புச் சேர்த்தார்கள்.
சிங்கப்பூர்வாழ் தமிழரான, பாவலர் இறையரசனாரின் மகன் இறை. மதியழகன் ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கிறார். அவரும் அவரது உறவினர்களும் வெளியீட்டின்போது உடனிருந்தனர்.

வெளியிட்டுக்கு முன்னர், மாண்புமிகு அமைச்சர் அவர்களுடனும், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக அயலகவாழ் தமிழர்கள் அணித் தலைவருமான மருத்துவர் கலாநிதி வீராசாமி அவர்களுடனும் சென்று, மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை அறிவியாலடயாத்தில் சந்தித்து வாழ்த்தைப் பெற்றனர்.
ஆவணப் படக்காணொளி இணைப்பு :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *