சி.சாமிநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 நவம்பர் 1943 அன்று கருவூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் சூ.தொட்டம்பட்டி என்னும் சிற்றூரில் சிவன்மலை-பொன்னம்மாள் இணையரின் இரண்டாம் மகனாகப் பிறந்தார். தனித்தமிழ்ப் பற்றின் காரணமாக இறையரசன் என்று தனது பெயர் மாற்றிக் கொண்டார். திண்ணைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பே முறையான கல்வி கற்றுள்ளார்.
தனது 17-ஆவது வயதில் எலவனூர் என்ற சிற்றூரில் தையல் தொழில் கலைஞராக பயிற்சி பெற்ற போதே, நண்பர் இராமசாமி அன்பளிப்பாக கொடுத்த திருக்குறள் நூலை வாசித்து அதன் பால் ஈர்க்கப்பட்டு முழுதும் கற்று 1330 குறள்களையும் மனப்பாடமாக கூறும் திறனை வளர்த்துக் கொண்டது, இவர் வாழ்க்கையை இலக்கியத்தை நோக்கியும் அரசியலை நோக்கியும் மாற்றியது.