
27-08-2023 அன்று காலை 10 மணிக்கு சோமூர் அருகே வேடிச்சிபாளையம் புதிதாக நூலக திறக்க ஸ்காட்லாந்தில் பேராசிரியராகப் பணிபுரியும் நண்பர் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தத் துவக்க விழாவில், பாவலர் இறையரசனார் படத்தை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு செல்வி. ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்தார். அவரே பின்னர் நூலகத்தையும் திறந்து வைத்து வாழ்த்திச் சிறப்புரை வழங்கினார்.
பாவலர் இறையரசனார் நினைவாக, சிங்கப்பூரில் வசிக்கும் அன்னாரது மகன் கவிஞர் இறை. மதியழகன் நூலகத்துக்கு ஒரு லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கி உரையாற்றினார்.
உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் அயலகவாழ் ஆராய்ச்சியாளர்களின் ஒருங்கிணைப்பாளரான முனைவர் பவித்ரா ராஜன் அவர்களும், உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் முனைவர் பாரதி நடராஜன் அவர்களும், ANEH அறிவியல் அறக்கட்டளையின் இயக்குநர் முனைவர் குமார் பழனிசாமி அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த நூலகத்தை உருவாக்கப் பெருமுயற்சி எடுத்த ஸ்காட்லாந்தில் பணிபுரியும் பேராசிரியர் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து ஆற்றிய நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.




