பாராட்டுகள்

பெற்ற விருதுகள்

  • உலகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவையின் கிருட்டிணகிரி மாநாட்டில் தலைவர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு இவருக்கு “கவிமாமணி” விருது வழங்கினார்கள்.
  • ஈரோடு தமிழ்ச்சங்கம் “இன்கவி ஏறு” விருதும்,
  • “சேலம் சங்கொலி” விழாவில் “உரையப்பா ஊற்று” விருதும்,
  • உலக திருக்குறள் மையம் “திருக்குறள் விருதும்”,
  • ஈரோடு குறளாயம் வேலா அறக்கட்டளை “திருக்குறள் மணி” விருதும்
  • உலக திருக்குறள் உயராய்வு மையம் “குறள் படைப்புச் செம்மல்” விருதும் இவருக்கு வழங்கியுள்ளன.
  • 1996-ல் அமெரிக்கக் கலிபோர்னியா “உலகக் கலை இலக்கியப் பண்பாட்டுக் கழகம்” இவருக்கு “இலக்கிய முனைவர்” (டி.லிட்.,) என்ற பட்டம் வழங்கியுள்ளது.
  • 2000-ஆம் ஆண்டு, அமெரிக்க சிகாகோ “உலகத்தமிழ் மொழி அறக்கட்டளை” இவரின் திருக்குறள் தொண்டுகளைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
  • அனைத்து விருகளுக்கும் முத்தாய்ப்பாக தி.மு.கழகம் 2001-ஆம் அண்ண்டு 15-செப்டம்பர் அன்று ஆண்டுதோறும் நடத்தும் முப்பெரும் விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் “பாவேந்தர் விருது” வழங்கிச் சிறப்பித்தார்கள். அந்த விருது தொடங்கப்பட்ட பின் விருதைப் பெறும் இரண்டாமவர் என்பது இவரது இலக்கியப் பங்களிப்புக்கான மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.