“இன்பம்” – பாவலர் இறையரசன்
அறிவினை வளர்த்தல் இன்பம்!
அனைவரும் சமமே என்னும்
அறத்தினை மதித்தல் இன்பம்!
அன்புடன் பழகல் இன்பம்!
திறமொடு வாழ்தல் இன்பம்!
தீமையை ஒழித்தல் இன்பம்!
குறள்நெறி வாழ்ந்தால் என்றும்
குறைவிலா இன்பம்! இன்பம்!
தென்றல் தீண்டல் இன்பம் !
தெம்மாங் கிசைத்தல் இன்பம்!
மன்றினில் அறிஞர் கூறும்
மாண்புரை கேட்டல் இன்பம்!
என்றுமே இளமை குன்றா
இன்றமிழ்ப் படித்தல் இன்பம்!
பொன்றுமே உயிரென் றாலும்
புகழ்வரும் வழியே இன்பம்!
கலைகளைக் காணல் இன்பம்!
கவின்பாப் புனைதல் இன்பம்!
இலையெனும் வறியோர்க்
கொன்றை ஈவதே உயர்ந்த இன்பம்!
நிலையிலா வாழ்க்கை தன்னை
நேர்மையாய் வாழ்தல் இன்பம்!
சிலையாக வாழும் சான்றோர்
செவ்வழி நடத்தல் இன்பம்!
நல்லோரைமதித்தல்இன்பம்!
நடுநிலைநிற்றல்இன்பம்!
பொல்லாரைத்திருத்தல்இன்பம்
பொறுமையேமிகவும்இன்பம்!
எல்லோரும்ஒன்றாய்க்கூடி
ஏற்றமாய்வாழ்வதின்பம்!
வல்லூறாய்வாழ்வோர்தம்மை
வன்மையாய்ஒறுத்தல்இன்பம்
வள்ளுவன்குறளேஇன்பம்!
வையமேஏற்கும்இன்பம்!
தெள்ளியதமிழ்ப்பாஇன்பம்!
தென்தமிழ்க்கலைதான்இன்பம்!
ஒள்ளியஅறிவேஇன்பம்!
உயர்வானபண்பேஇன்பம்!
வள்ளலாய்வாழ்வதின்பம்
வையமேவாழ்த்தும்இன்பம்!
குழலொடுயாழும்இன்பம்!
கொள்கையேதூயஇன்பம்!
மழலையின்சொற்கள்இன்பம்
மகிழ்ந்துடல்தீண்டல்இன்பம்
விழிவேல்வஞ்சிஇன்பம்
விளம்பொணாஇனியஇன்பம்
வழுவிலாவழியில்சென்றால்
வாழ்வினில்என்றும்இன்பம்!
30-1-84 திருச்சி’வானொலி’இலக்கியஏடு
1 Comment